சீன-ஆப்கான் வெளியுறவு அமைச்சரின் பேச்சுவார்த்தை

2019-09-08 15:52:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 7ஆம் நாள் இஸ்லாமாபாதில் ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ரபானியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங் யீ பேசுகையில், சீனாவும், ஆப்கானிஸ்தானும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும், நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. சீனாவின் மைய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினையில் சீனாவை ஆப்கானிஸ்தான் ஆதரிப்பதற்கு சீனா நன்றி தெரிவிக்கிறது. ஆப்கான் தேசிய ஒற்றுமை அரசு, இறையாண்மை, சுதந்திரம் மற்றும் கெளரவத்தைப் பேணிகாப்பதற்குச் சீனா ஆதரவளிக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டு அரசுத் தலைவர்களின் பொது கருத்தைச் செயல்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியை ஆழமாக்கி, பல்வேறு துறை ஒத்துழைப்பை முன்னேற்ற சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு ரபானி வாழ்த்து தெரிவித்தார். நீண்டகாலமாக, அமைதி, வளர்ச்சி, நிதானம் உள்ளிட்ட துறைகளில் சீனா ஆப்கானிஸ்தானுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு ஆப்கானிஸ்தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்