சீன-ஆப்கான்-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையின் சாதனைகள்

2019-09-08 16:07:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்கான்-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் மூன்றாவது முறை பேச்சுவார்த்தை 7ஆம் நாள் இஸ்லாமாபாதில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ராபானி, பாகில்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு, இப்பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஐந்து அம்ச பொது கருத்துக்களை வாங்யீ செய்தியாளர்களிடம் விவரித்தார்.

முதலில், சீன-ஆப்கான்-பாகிஸ்தான் முத்தரப்பு ஒத்துழைப்பு அமைப்பு முறை, முத்தரப்பு ஒற்றுமையை விரைவுபடுத்துதல், ஆப்கானின் அரசியல் இணக்கத்தை முன்னேற்றுதல், மண்டல தொடர்பை வலுப்படுத்துதல், பிரதேசத்தின் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றில் ஆக்கப்பூர்வ சாதனைகளைப் பெற்றுள்ளது.

இரண்டு, ஆப்கான் நிலைமை, தீர்க்கமான காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது என முத்தரப்பும் ஒருமனதாக கருதுகின்றது. எனவே, வெளிநாட்டுப் படைகள் முறைப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும்.

மூன்று, ஆப்கான்-பாகிஸ்தான் உறவின் மேம்பாடு, இவ்விரு நாடுகளும் பிரதேச அமைதி, நிதானம் மற்றும் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என முத்தரப்பு கருதுகின்றது.

நான்கு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுக்கோப்புக்குள் முத்தரப்பு ஒத்துழைப்பை முன்னேற்ற வேண்டும்.

ஐந்து, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்