டாயில் மோரி மன்னிப்பு கேட்க வேண்டும்:சீனாவின் கோரிக்கை

வாணி 2019-10-07 16:34:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க என்பிஏ தெ ஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணியின் தலைமை மேலாளர் டாயில் மோரி அண்மையில் ஹாங்காங் தீவிரவாதிகளின் முழக்கத்தை தனது சமூக ஊடகத்தில் பரப்புரை செய்தது சீனாவில் அதிக கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து சீனக் கூடைப்பந்து சம்மேளனம், சீன ஊடகக் குழுமம், ராக்கெட்ஸ் கிளப்பின் பல சீன விளம்பரத்தாரர்கள் ஆகியவை அடுத்தடுத்து அதனுடனான ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்தன.

நாட்டின் இறையாண்மையும் தேசிய கௌரவமும் ஒரு போதும் பாதிக்கப்படக் கூடாது என்பது ஒரு பொது விதியாகும். நடைமுறைகளைப் புறக்கணித்து ஹாங்காங்கில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் மோரியின் செயல் சீனாவின் அடிப்படை எல்லையை அத்துமீறியுள்ளது.

புகழ்பெற்ற சீன வீரர் யாவ் மிங் அந்த அணியில் இருந்த காரணத்தால், நீண்டகாலமாக ஹூஸ்டன் ராக்கெட்ஸ் சீனாவில் அதிக மக்களின் ஆதரவுடன், பெரும் லாபத்தைப் பெற்றது. லாபத்தைப் பெறும் அதேவேளையில் சீன மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் ஒருபோதும் அனுமதிக்கப்படாது. அதற்குரிய விலையை டாயில் மோரி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்