பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறை ஆய்வு கூட்டம்

2019-10-29 11:15:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறை ஆய்வுக் கூட்டம் 28ஆம் நாள் பிரேசிலின் ரியோ தே ஜெனெய்ரோ நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சகத்தின் துணை அமைச்சர் லியாங் யன் சுன், ரியோ தே ஜெனெய்ரோ நகருக்கான சீனாவின் துணை நிலைத் தூதர் லீ யாங், பிரேசில் பொருளாதார அமைச்சகத்தின் துணை அமைச்சர் லுகாஸ் ஃபேராஸ் உள்ளிட்ட சீனா, ரஷியா, இந்தியா, பிரேசில், தென்னாப்பரிக்கா முதலிய ஐந்து பிரிக்ஸ் நாடுகளின் சுமார் 150 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய காலம், புதிய இயக்கு ஆற்றல் மற்றும் ஆட்சி முறை புத்தாக்கம், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற தலைப்பினைக் கொண்ட இக்கூட்டத்தில், ஆட்சி முறை அனுபவங்கள், எண்ணியல் பொருளாதாரம், புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டுவது, பலதரப்புவாதத்தைப் பேணிகாப்பது, திறப்புத் தன்மையுடைய உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது முதலியவை தொடர்பாக அவர்கள் விவாதித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்