சீனத் தலைமையமைச்சரின் தாய்லாந்து பயணம்

சரஸ்வதி 2019-11-03 13:58:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் நவம்பர் 2ஆம் நாளிரவு, சிறப்பு விமானம் மூலம், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கைச் சென்றடைந்துள்ளார். இப்பயணத்தின் போது, அவர் 22ஆவது சீன-ஆசியான் தலைவர்களுக்கான கூட்டம், 22ஆவது ஆசியான், சீன-ஜப்பான்-தென் கொரிய ஆகிய தலைவர்களுக்கான கூட்டம், 14ஆவது ஆசியான் உச்சிமாநாடு முதலியவற்றில் லீக்கெச்சியாங் பங்கெடுப்பார். அதோடு, அவர் தாய்லாந்தில் அதிகாரப்பூர்வ பயணத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.

உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குரிய நிர்ப்பந்தம் அதிகரிப்பது உள்ளிட்ட பல அறைகூவல்களைப் பார்க்கும் போது, ஒத்துழைப்பு ஒன்றே பொது முன்னேற்றப் போக்குக்கான வழி என்பது புலப்படும்! அதன் மூலம் மட்டுமே, கூட்டு நலன்களை நனவாக்க முடியும். ஆசியான் ஒத்துழைப்புக்கான தலைவர்களின் கூட்டத் தொடரின் மூலம், கிழக்காசிய ஒத்துழைப்பு விரைவுபடுத்தப்பட்டு, மாபெரும் வளர்ச்சியடைய வேண்டும் என்று சீனத் தரப்பு விரும்புவதாக லீக்கெச்சியாங் குறிப்பிட்டார்.

இதனிடையே, குறிப்பிட்ட நாடுகளின் தலைவர்களுடன் லீக்கெச்சியாங் இரு தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்