எஸ்சிஓ அமைப்பின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்:லீகெச்சியாங் வேண்டுகோள்

வான்மதி 2019-11-03 16:20:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் நவம்பர் 2ஆம் நாள் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர்கள் செயற்குழுவின் 18ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டார். உஸ்பேகிஸ்தான், ரஷியா, கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜ்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைமை அமைச்சர்களும் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளும், பார்வையாளர் நாடுகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

லீகெச்சியாங் உரை நிகழ்த்துகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் வளர்ச்சிக்கான அடிப்படையான பாதுகாப்பை வலுப்படுத்துதல், திறப்பு மற்றும் இணைப்பை விரிவாக்குவதன் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரித்தல், தொடர்பு கட்டமைப்பை முழுமைப்படுத்துவதன் வழி உயர்தர வளர்ச்சிக்கு வசதியளித்தல், புத்தாக்க அம்சங்களை வளர்ப்பதன் மூலம் புதிய இயக்காற்றலை வலுப்படுத்துதல், மக்களே முதன்மை என்ற கொள்கையைப் பின்பற்றி வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து அவர் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டு, ஒத்துழைப்புக்கான பல ஆவணங்கள் மற்றும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்