​22ஆவது ஆசியான் மற்றும் சீனா ஜப்பான் தென் கொரியா தலைவர்கள் கூட்டம்

தேன்மொழி 2019-11-04 15:48:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தாய்லாந்தின் தலைநகர் பெங்கொக்கில் நவம்பர் 4-ஆம் நாள் நடைபெற்ற 22வது ஆசியான் மற்றும் சீனா, ஜப்பான் தென் கொரியா தலைவர்கள் கூட்டத்தில் சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் கலந்துகொண்டார். அதோடு, ஆசியானைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள், தென் கொரியா அரசுத் தலைவர் ஜப்பானிய தலைமை அமைச்சர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் லீக்கெச்சியாங் கூறுகையில், தற்போது சர்வதேச நிலைமை சிக்கலான மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளதால், உலகப் பொருளாதார அதிகரிப்பு வேகம் குறைந்து வருகின்றது. இப்பின்னணியில், ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டாக அறைகூவலைச் சமாளித்து, பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் நிதானத்துக்கு புதிய இயக்காற்றலைக் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்