14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் சீனத் தலைமையமைச்சர்

சரஸ்வதி 2019-11-05 17:42:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 4ஆம் நாள் பிற்பகல், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், 14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கெடுத்தார். ஆசியானின் 10 நாடுகளின் தலைவர்கள், தென் கொரிய அரசுத் தலைவர், ரஷியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்கள், அமெரிக்க அரசுத் தலைவரின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்திற்கான துணையாளர் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர்.

கிழக்காசிய உச்சிமாநாடு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியில் ஊன்றி நின்று, வளர்ச்சிக்கு முன்னுரிமையை வழங்கி, பாரம்பரியமற்ற பாதுகாப்பு ஒத்துழைப்பில் நடைபோட வேண்டும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

தொடரவல்ல கூட்டாளியுறவுக்கான அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இந்த உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்