சீன ஊடகக் குழுமம் பிரேசில் க்லோபோ ஊடகக் குழுமம் இடையே ஒத்துழைப்பு!

ஜெயா 2019-11-13 09:41:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நவம்பர் 11ஆம் நாள் சீன ஊடகக் குழுமமும், இலத்தின் அமெரிக்காவின் மிகப் பெரிய ஊடகக் குழுமமான பிரேசில் க்லோபோ ஊடகக் குழுமமும் ஒத்துழைப்புக் குறிப்பாணையில் கையொப்பமிட்டன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, 5G தொழில் நுட்பப் பயன்பாடு முதலிய துறைகளில் இரு தரப்பும் ஒத்துழைப்பு மேற்கொள்ளவுள்ளன.

இந்த ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவது பற்றி சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென்ஹாய்சியோங் பிரேசில் ரியோ டி ஜெனிரோவில், க்லோபோ ஊடகக் குழுமத்தின் தலைவருடன் பணிக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது ஷென்ஹாய்சியோங் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இது, இரு நாட்டுறவுக்கும் இரு நாட்டுப் பொருளாதார மற்றும் பண்பாட்டு ஒத்துழைப்புக்கும் புதிய இயக்கு ஆற்றலை வழங்கவுள்ளது. மேலும் சீன-பிரேசில் ஒத்துழைப்பு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பின் மாதிரியாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்