சீன-பிரேசில் இடையே ஊடகக் ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை

பூங்கோதை 2019-11-15 10:08:23
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமும், ஈபிசி எனப்படும் பிரேசிலின் தேசிய ஊடக நிறுவனமும் உள்ளூர் நேரப்படி நவம்பர் 13ஆம் நாள் பிரேசிலியாவில் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. இவ்வுடன்படிக்கையின்படி, ஒளி மற்றும் ஒலி மூலவளங்களின் பரிமாற்றம், உள்ளடகங்களின் பகிர்வு, கூட்டுத் தயாரிப்பு, பணியாளர்களுக்கிடையிலான தொடர்பு, 5ஜி தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பன்முக ஒத்துழைப்புகளை இரு தரப்பும் மேற்கொள்ளும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய்சியொங், ஈபிசி நிறுவனத்தின் தலைவர் லூயிஸ் கோம்ஸ் ஆகியோர், இவ்வுடன்படிக்கையில் கூட்டாகக் கையொப்பமிட்டனர்.

அப்போது ஷென் ஹாய்சியொங் பேசுகையில், இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முன்முயற்சியுடன், சீன-பிரேசில் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு மென்மேலும் ஆழமாகி வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான மனித தொடர்பு மற்றும் வர்த்தகப் பரிமாற்றத்துக்கு இந்த ஒத்துழைப்பு புதிய இயக்காற்றலை ஊட்டுவது உறுதி என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்