ஜி 20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்

மதியழகன் 2019-11-23 15:38:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பலதரப்புவாதத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஜி-20 அமைப்பு தலைமையேற்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ நவம்பர் 23ஆம் நாள் ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற ஜி-20 அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றபோது தெரிவித்தார்.

தற்போது, உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு இடர்ப்பாடு அதிகரித்து வருகிறது. ஒருதரப்பு வாதம் மற்றும் பாதுகாப்பு வாதம் ஆகியவை தலை தூக்கி நிற்கும் பின்னணியில், உலகில் நிலையற்ற மற்றும் உறுதியற்ற காரணிகள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில், நாம் முனைப்புடன் செயல்பட்டு, பலதரப்புவாதத்தை நிலைநிறுத்தி, ஒருதரப்பு மற்றும் பாதுகாப்பு வாதத்தைக் கைவிட வேண்டும் என்று வாங் யீ கூறினார்.

மேலும், பலதரப்புவாதம், உலகளாவிய அறைகூவல்களைத் தீர்பதற்கான முக்கிய திறவுகோல் ஆகும். பலதரப்புவாதத்தைக் கடைப்பிடிப்பதற்கு ஜி-20 அமைப்பு தலைமையேற்று, உலகப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கு சாத்தியமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்