​சீனச் சந்தை மீது புகழ்பெற்றச் சுரங்கத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை

தேன்மொழி 2019-11-29 10:09:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கனிமவளம் மற்றும் தொழில் நுட்ப மாநாடு நவம்பர் 27,28ஆகிய இரு நாட்களில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட அரசுகள் மற்றும் சுரங்கத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் 2020ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மீது முழு நம்பிக்கை தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவின் BHP தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த மேற்கு ஆஸ்திரேலிய இரும்புத் தாது அலுவலுக்கான தலைமை இயக்குநர் எட்ஜர் பாஸ்டோ இம்மாநாட்டில் கூறுகையில், சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவு உள்ளிட்ட முக்கியக் கொள்கைகள், எங்களது தொழில் நிறுவனத்துக்கு லாபத்தை அதிகரிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று தெரிவித்தார்.

தவிர, தூய்மையான எரியாற்றலை வளர்க்கும் துறையில் சீனாவுடன் சேர்ந்து விரிவான முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புகின்றோம் என்று இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பல சுரங்கத் தொழில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்