உய்கூர் மக்களின் கல்லறையைப் பாழாக்குதல் குறித்து மேலை ஊடகங்கள் பொய்க் கூற்று

இலக்கியா 2020-01-14 15:11:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது, லண்டனில் வசித்து வரும் ஏச்சி ஏஷா என்ற உய்கூர் இனத்தின் ஒரு கவிஞர், தனது தந்தையின் கல்லறையைக் கண்டறிய முடியவில்லை என்பதை எடுத்துக்காட்டி, உய்கூர் இனத்தின் கல்லறைகள் சின்ச்சியாங்கின் உள்ளூர் அரசால் சீரழிக்கப்படுகின்றன என்றும், இது, உய்கூர் இனத்தின் பண்பாட்டை அழிக்கும் சீன அரசின் வழிமுறையாகும் என்றும், அமெரிக்க சிஎன்என் நிறுவனம், அண்மையில் தெரிவித்தது. இக்கட்டுக் கதைக்கு மாறாக, ஏஷாவின் தாய் எபிச்சாமு தலைமையில், சீனச் சர்வதேசத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்தியாளர்கள் உண்மையைத் தேடிக் கண்டறிந்தனர்.

எபிச்சாமு கூறுகையில் பழைய பழக்கத்தின்படி நிறுவப்பட்ட கல்லறை, காட்டு விலங்குகள் மற்றும் இயற்கைச் சீற்றத்தால், அடிக்கடி பாழாகி வந்தது. 2000ஆம் ஆண்டு முதல், சுமார் 10 ஆண்டுகளாகப் பொதுக் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டு வந்த பின், 2018ஆம் ஆண்டின் இறுதியில் சொந்த விருப்பத்துடன், ஏஷாவின் தந்தையின் கல்லறை, முந்தைய கல்லறைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்