ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் சீனப் பழமொழி வழியாக சீனா பற்றி புரிந்து கொள்ளலாம்:மியன்மாரின் ரசிகர்கள்

வான்மதி 2020-01-14 21:01:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் சீனப் பழமொழி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மியன்மார் மொழிப் பதிப்பு ஜனவரி 14ஆம் நாள், மியன்மாரின் மிகப் பெரிய வணிக தொலைக்காட்சி நிலையமான ஸ்காய் நெட் நிலையத்தின் அறிவு அலைவரிசையில் ஒளிபரப்பப்பட தொடங்கியது.

மியன்மார் ரசிகர்கள் சீனா பற்றி சீராக புரிந்து கொள்ளும் வகையிலும் சீன அரசுத் தலைவரின் சிறந்த பண்பு மற்றும் நடத்தையை அறிந்து கொள்ளும் வகையிலும், சீன ஊடகக் குழுமம் மற்றும் ஸ்கை நெட் தொலைக்காட்சி நிலையம் இணைந்து மியன்மாரின் பண்பாட்டு அறிஞர்களை அழைத்துக் கொண்டு, ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் சீனப் பழமொழி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்தன. சீனாவின் அமைதியான வளர்ச்சிப் பாதை, அண்டை நாடுகளுடனான நட்புறவு, மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்கு சீனாவின் முயற்சி ஆகியவை பற்றி இந்நிகழ்ச்சியில் முக்கியமாக விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

சிறப்பு நிகழ்ச்சின் போது, ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் சீனப் பழமொழி என்ற புத்தகத்தின் மியன்மார் மொழிப் பதிப்பின் முதலாவது வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்