பிரிக்ஸ் நாடுகளின் ஆதரவுக்கு சீனா நன்றி

தேன்மொழி 2020-02-12 20:15:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் அமைப்பின் நடப்புத் தலைமை பதவி வகிக்கும் நாடான ரஷியா 11-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிரிக்ஸ் நாடுகளின் சார்பில், புதிக ரக கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் 12ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், இந்த முக்கியக் காலத்தில், ஆக்கப்பூர்வமான மற்றும் செயலாக்கம் வாய்ந்த கருத்தை பிரிக்ஸ் நாடுகள் வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு ஆதரவு அளிப்பதோடு, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று உதவி அளித்து, கூட்டாக இன்னலைச் சமாளிக்கும் குறிக்கோளை இது காட்டுகின்றது. சீனா இதை உயர்வாக பாராட்டுகின்றது என்று தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நோய் தடுப்புப் பணியை மேற்கொள்ள சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்