சீனப் பொருளாதாரம் மீதான மதிப்பீட்டுக்குக் காலம் தேவை:சர்வதேச நாணய நிதியம்

இலக்கியா 2020-02-13 10:40:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சீனா உரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது இந்நோய் சீனப் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பை மதிப்பிடுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் ஜோச்கியேவா 12ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

நோயால் பாதிக்கப்பட்ட மக்களும் பிரதேசங்களும் இக்கட்டான காலக்கட்டத்தில் உள்ளனர். நோய் பரவல் தடுப்புப் பணியை நாட்டின் மையக் கடமையாகச் செய்வது சரியானது. சீன அரசின் செயல்பாட்டைப் பாராட்டுகின்றோம். நோய் பரவலைக் கட்டுப்படுத்திய பிறகு, குறிப்பிட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்