அமெரிக்க உளவு அமைப்பு ஒட்டுக்கேட்பு

இலக்கியா 2020-02-13 11:49:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஜெர்மனி பொது வானொலி நிறுவனத்தின் ஒரு கூட்டு விசாரணையின்படி, கடந்த நூற்றாண்டின் 70ஆம் ஆண்டுகள் முதல், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, ஜெர்மனியின் உளவு அமைப்பு ஆகியவை ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த க்ரிப்டோ ஏஜி என்ற நிறுவனத்தை வாங்கி, அதன் சாதனங்களின் மூலம், உலக அளவில் 120 நாடுகளின் தகவல்களை ஒட்டுக்கேட்டுள்ளன.

க்ரிப்டோ ஏஜி என்ற நிறுவனம், ஈரான், இந்தியா, பாகிஸ்தான், வாடிகன் உள்ளிட்ட 120 நாடுகளுக்குத் தொலைத்தொடர்பு மறைகுறியாக்க சாதனங்களை விற்றுள்ளது.

1979ஆம் ஆண்டில் 52 அமெரிக்கர்கள் பணயக்கைதிகளாக ஈரானில் காவலில் வைக்கப்பட்டிருந்த காலத்தில் ஈரான் தலைவர்களைக் கண்காணிப்பது, ஃபோக்லாந்த் போரின்போது அர்ஜென்டீனா படையின் தகவல்களை பிரிட்டனுக்கு வழங்குவது முதலியவை இந்நிறுவனத்தின் உளவு நடவடிக்கையில் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்:வாஷிங்டன் போஸ்ட்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்