ஹுவாவெய் மீதான தடை நீட்டிப்பு

இலக்கியா 2020-02-14 16:10:56
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹுவாவெய் தொழில் நிறுவனத்துக்கான தற்காலிகப் பொது உரிமத்தை 45 நாட்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க வணிக அமைச்சகம் 13ஆம் நாள் தெரிவித்தது.

ஹுவாவெய் மற்றும் அதன் கிளை தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள், சேவை ஆகியவற்றின் மீதான வர்த்தகத் தடை உத்தரவை அமெரிக்கா நீட்டிப்பது இது 4ஆவது முறையாகும்.

அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த நீட்டிப்பு தேவையானது. இதன் மூலம், அமெரிக்காவின் தொலைத்தொடர்பு வணிகர்கள், குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு இணையத்தைத் தொடர்ந்து பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டது.

கடந்த ஆண்டின் மே 15ஆம் நாள் ஹுவாவெய் மற்றும் அதன் கீழுள்ள 68 கிளை நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. அதன் பிறகு, ஹுவாவெய் மற்றும் அதன் கிளை நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக 3 முறை தற்காலிக பொது உரிமத்தை, அமெரிக்க வணிக அமைச்சகம் வழங்கியது. அமெரிக்காவில் தொலைத் தொடர்புச் சேவை வழங்குவதில் ஹுவாவெய் நிறுவனம், குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்