ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவுக்கு சீனா நன்றி

தேன்மொழி 2020-02-14 16:17:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு சீன அரசும் மக்களும் மேற்கொண்டுள்ள உரிய நடவடிக்கைளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வரவேற்கின்றது. அதோடு, சீனத் தரப்புக்கு தேவையான உதவி அளித்து, நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொள்ளும் என்று இவ்வமைப்பு பிப்ரவரி 14-ஆம் நாள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்வதேச சமூகம், உலகச் சுகாதார அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பிரதேச மற்றும் சர்வதேச பொது சுகாதாரப் பாதுகாப்பைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றும் இவ்வறிக்கையில் வேண்டுகோள் விடுத்தது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அறிக்கை குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங் ஷுவாங் 14-ஆம் நாள் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கும் இடையே பாதகாப்பையும் ஆபத்தையும் ஒரு சேர எதிர்கொண்டு, ஒன்றுக்கொன்று உதவி அளிக்கும் சிறப்பான பாரம்பரியம் இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டாக நோயை எதிர்க்க சீனத் தரப்பு விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்