நோய் தொற்றை மூடிமறைத்து, உள் தகவலின் அடிப்படையில் பங்கு வர்த்தகம் செய்வது நேர்மையா?

வாணி 2020-03-21 20:19:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிப்ரவரி 13ஆம் நாள், அமெரிக்க செனட் அவையின் உளவு ஆணையத்தின் தலைவரும் குடியரசுக் கட்சி உறுப்பினருமான ரிச்சர்ட் பெர் மற்றும் அவருடைய மனைவியின் கையில் இருந்த 33 பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு 6 இலட்சம் முதல் 17.2 இலட்சம் அமெரிக்க டாலராகும். அமெரிக்காவில் தொற்று நோய் நிலைமையை சமாளிக்கும் ஆவணங்களை வரையும் பணியில் பங்கெடுத்த அவர் செனட் அவையின் பொதுச் சுகாதார ஆணையத்தின் உறுப்பினராகவும் உள்ளார். கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின், அவர் வழமையாக நோய் நிலைமை தொடர்பான சுற்றறிக்கையைக் கேட்டறிந்து வருகின்றார். ஆனால் நோய் தொற்று நிலைமை மோசமாக இல்லை என்று பொது மக்களிடம் தெரிவித்த அவர் மறைமுகமாக தங்களது பங்கு பத்திரங்களை விற்பனை செய்தது மக்களிடையே எதிர்வினைகளையும் கோபத்தையும் எழுப்பியுள்ளது. பெர்ரைப் போல் அதிக பங்கு பத்திரங்களை விற்பனை செய்தவர்களில் மற்ற 3 செனட் உறுப்பினர்களும் அடங்குவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளையில், அமெரிக்க பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்ட போது, அரசின் மீட்பு நடவடிக்கை சீக்கிரமாக மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசின் நிர்பந்த்த்தில் பெடரல் ரிசர்வ் வங்கியின் தனித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஜனவரி 20ஆம் நாள் அமெரிக்காவில் முதலாவது கொவைட்-19 நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது முதல் மார்ச் 13ஆம் நாளிலேதான் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டது வரை, 2 திங்கள் காலமாகிவிட்டது. பொது மக்களின் உடல் நலத்தை விட மூலதனமே முதன்மை என்பதைக் கடைப்பிடித்த அமெரிக்க அரசியல் வாதிகளின் நேர்மை இதன்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்