கொவைட்-19 பரவலுக்கு அமெரிக்க அரசியல்வாதிகளே காரணம்

இலக்கியா 2020-03-23 18:36:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க தி அட்லாண்டிக் மாத இதழ் அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், உலகின் இதர நாடுகள் கொவைட்-19 நோயை, பொது சுகாதாரத்துக்கான அச்சுறுத்தல் எனக் கருதிச் சமாளித்து வந்த போது, அமெரிக்கத் தலைவர்கள் இதை அரசியல் பிரச்சினையாகக் கருதி, வைரஸ் பரவல் குறித்த உண்மையை மறுத்தனர். இச்செயல் அரசியல் ரீதியாக நலன் அளித்திருக்கலாம். ஆனால் தவிர்க்க முடியாத பொதுச் சுகாதார நெருக்கடி இத்தனால் தீவிரமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது அமெரிக்காவில் கொவைட்-19 நோய் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை உலகளவில் மூன்றாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது.

அமெரிக்க தி டெய்லி பீஸ்ட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, அதிகாரிகளின் கூற்று ஒரே விதமாக இருக்க வேண்டுமென அமெரிக்க அரசவைக்கு அனுப்பப்பட்ட ஒரு தந்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பு நிலைமையைச் சீர்குலைப்பவர் யார் என்பதை இது காண்பிக்கிறது.

பிரிட்டனின் லண்டன் மாநகராட்சி தலைவர் சத்க் ஹான் தி கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில், பொருளாதாரத் துறையில் உலக நாடுகளை ஒருங்கிணைப்பது மூலம், இவ்வைரஸ் பாதிப்பைச் சமாளிக்க வேண்டும். அது சீன வைரஸ் அல்ல. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்