டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பயன் அளிக்கவில்லை

சிவகாமி 2020-03-23 19:08:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் டிரம்ப் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பயன் அளிக்கவில்லை என்று நியூயார்க் மாநகராட்சித் தலைவர் பில் டி ப்ளாசியோ செய்தியாளர் கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது கோடிக்கணக்கான அமெரிக்க மக்களுக்குப் புரியவில்லை. அமெரிக்கா அவசர நிலைமையில் சிக்கியுள்ள போது, நீங்கள் அரசாங்க அதிகாரத்தைச் சரியாகச் செயல்படுத்தத் தவறினீர்கள் என்று அவர் குறைகூறினார்.

அடுத்த 2 மற்றும் 3 வாரங்களில், நியூயார்கில் கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் அனைத்து மருத்துவப் பொருட்களும் தீர்ந்து விடும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்