உண்மையான நண்பர் யார்?

வாணி 2020-03-24 19:08:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளதோடு, இதர நாடுகளுக்குச் சீனா உதவி வழங்கத் துவங்கியுள்ளது.

ஆனால், இந்நிலைமைக் கண்ட சில அமெரிக்க அதிகாரிகளும் ஊடகங்களும் தங்களது பொறாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பொருள் உதவி மூலம் சீனா இந்த நாடுகளில் பிரச்சார முயற்சி மேற்கொண்டு வருகின்றது என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆணையத் தலைவர் நவாரோ குற்றம் சாட்டியுள்ளார். நியூயார்க் டைமஸ் அண்மையில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், இதர நாடுகளுக்கு சீனா மருத்துவ உதவி வழங்குவதற்கு குறிப்பிட்ட உள் நோக்கம் உள்ளது என்று கூறப்பட்டது.

இத்தகைய கூற்றுகள் உலக நாடுகள் கூட்டாக நோய் பாதிப்பைச் சமாளிப்பதைப் பாதித்துள்ளது.

வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பதில் அமெரிக்கா உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூற்றின்படி செயல்படவும் தவறியுள்ளது. பெரிய நாடான இது உரிய சர்வதேசக் கடமையை ஏற்காமல், வேறு நாடுகளுக்கு உதவி அளிக்கும் சீனா பற்றி உண்மையைத் திரித்து கூறுகின்றது.

இத்தாலியைச் சேர்ந்த சான்டோஸ் என்பவரின் கூற்றைப் பாருங்கள். அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய நாட்டவர்களுக்கு அமெரிக்கா தடை செய்துள்ளது. ஆனால், சீனா இத்தாலிக்கு நிதி மற்றும் பொருள் உதவி வழங்கியதோடு மருத்துவர் குழுவையும் அனுப்பியுள்ளது. யார் தனது உண்மையான நண்பர் என்பதை பல்வேறு நாடுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்