வைரஸ் பரவல் தடுப்புக்கான பொருட்களைச் சீனா பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது

பூங்கோதை 2020-03-25 15:32:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவிலிருந்து ஹங்கேரி கொள்வனவு செய்த தொற்று நோய் தடுப்புக்கான பொருட்கள் உள்ளூர் நேரபடி மார்ச் 24ஆம் நாள் காலை புடாபெஸ்ட் விமான நிலையத்தை சென்றடைந்தன. 70 டன் எடையுடைய இப்பொருட்களில், 30 லட்சத்துக்கும் மேலான முக கவசங்கள், ஒரு லட்சம் நியூக்ளிக் அமிலம் சோதனை கருவிகள், 86 சுவாசக்கருவிகள், ஒரு லட்சம் பாதுகாப்பு ஆடைகள், ஒரு லட்சம் கை உறைகள் ஆகியவை அடங்கியுள்ளன.

மேலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்துள்ள மருந்துகள், துருக்கியின் தலைநகரிலிருந்து 40 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் சுகாதார அமைப்பு 24ஆம் நாள் தெரிவித்துள்ளது.

தவிரவும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கான சீனத் தூதுக்குழுவின் தலைவர் லியூ யூஷி, உள்ளூர் நேரப்படி 24ஆம் நாள், ஆப்பிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த சமூக விவகார ஆணையர் அமிராவுடன் சந்திப்பு நடத்தினார். கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான அதிகமான பொருட்களை ஆப்பிரிக்காவுக்கு வழங்கிய சீன அரசு மற்றும் பொது மக்களுக்கு அமிரா நன்றி தெரிவித்தார். சீனாவுடன் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேற்கொள்ள ஆப்பிரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்