போரை நிறுத்துக - ஐ.நா வேண்டுகோள்

ஜெயா 2020-03-26 10:28:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகம் கொவைட்-19 எனும் பொது எதிரியுடன் போராடி வருகிறது. ஆயுத மோதல்களைக் கைவிட்டுவிட்டு இந்த உண்மையான போரில் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது என்று ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரேஸ் அண்மையில் தெரிவித்தார்.

எதிர் நடவடிக்கைகளை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் முறையில் தீர்வு காணுமாறு ஏமனில் போரிடும் பல்வேறு தரப்புகளுக்கு அவர் 25ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

சௌதி அரேபியாவின் தலைமையிலான பன்னாட்டுப் படையின் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் மலிகி 25ஆம் நாளிரவு கூறுகையில், கொவைட்-19 நோய் ஏமனில் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஏமன் அரசுப் படை அந்நாட்டில் பன்முக போர் நிறுத்தத்தை நனவாக்க பன்னாட்டுப் படை ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

நோய் பரவலைத் தவிர்க்கும் வகையில், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க படையினரின் பயணம் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துவதாக அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெர் அன்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்