பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

இலக்கியா 2020-04-18 16:01:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது, அறிவியல் கேள்வியாகும். அது பற்றி அறிவியல் மற்றும் சிறப்பு ஆய்வு முடிவுகளைக் கேட்டறிய வேண்டும். ஆனால், சில அமெரிக்க அரசியல்வாதிகள், “வூ ஹான் வைரஸ்”என்று கூறி நேர்மையற்ற முறையில் வைரஸ் உருவாக்கும் பொறுப்பை சீனாவின் மீது சுமத்தி வருகின்றனர். தவறான எண்ணத்துடன், நோய் பரவலை அரசியல்மயமாக்கும் அமெரிக்காவின் முயற்சியை இச்செயல் வெளிக்காட்டுகிறது.

இதுவரை, அமெரிக்க அரசுத் தலைவர், உலகளவில் கரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா, ஒபாமா அரசு மற்றும் தன்னை விட அனைவரின் மீதும் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். தற்காலத்தில், வாக்கு பெறுவதற்காக என்றாலும் சரி, மக்களின் மனநிறைவின்மையை மாற்ற என்றாலும் சரி, அமெரிக்க ஆட்சியாளர்கள், பொறுப்பை பிறரின் மீது சுமத்துவதற்குப் பதிலாக, முதலில் நோய் பரவலைச் சமாளிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்