கரோனா வைரசை வென்றெடுக்க ஒத்துழைப்பே தேவை – தெட்ரோஸ்

இலக்கியா 2020-04-28 17:57:46
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகம் முழுக்க கரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் சீனா சர்வதேச ஒத்துழைப்பை மிகச் சிறப்பாக மேற்கொண்டு, ஒரு பெரிய நாட்டுக்குரிய பொறுப்பை வெளிக்காட்டியுள்ளது என்றும், சீன மக்கள் வெளிப்படுத்திய துணிவும் கவனமும் மதிப்புக்குரியவை என்றும் பிரான்ஸின் முன்னாள் தலைமை அமைச்சர் ஜேன் பியெர் ரஃப்ரைன் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 19ஆம் நாள் வரை 127 நாடுகளுக்கும் 4 சர்வதேச அமைப்புகளுக்கும் மருத்துவ முகக் கவசம், பாதுகாப்பு ஆடை உள்ளிட்ட உதவி பொருட்களைச் சீனா வழங்கியுள்ளது. 15 நாடுகளுக்கு 17 மருத்துவ நிபுணர் குழுக்களை அனுப்பியுள்ளது. இவைத் தவிர சர்வதேசச் சமூகத்துடன் நோய்த் தடுப்பு அனுபவங்களையும் சிகிச்சை வழிமுறைகளையும் சீனா வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டு வருகிறது.

கடினமான நோய் தடுப்பு போராட்டம் நடைபெற்ற போது சர்வதேசச் சமூகம் சீனாவுக்கு அளித்த ஆதரவுக்கும் உதவிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும், மனித நேய எழுச்சியின் அடிப்படையில் மனித குலத்தின் பொது சமூகச் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் வகையிலும் சீனா செயல்பட்டு வருகிறது.

சீனா பகிர்ந்து கொண்ட அனுபவங்களின் படி, தெஹ்ரான், நியூயார்க், லண்டன் முதலிய நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகள் அவசரமாக போக்குவரத்து முடக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. அமெரிக்கா பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறது. ஈராக்கில் கொவைட்-19 நோய்க்கான சிகிச்சையில் சீனாவின் பாரம்பரிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், நோய் பரவலைத் தடுக்கும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒத்துழைப்பே மிக அவசியமான தேவையாக இருக்கின்றது என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்