கரோனா வைரஸ் பரவல் தடுப்பு: சிறப்பு இணைய இசை நிகழ்ச்சி

பூங்கோதை 2020-05-03 15:32:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான சிறப்பு இணைய இசை நிகழ்ச்சி மே 2ஆம் நாள் நடத்தப்பட்டது. சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இசையின் மூலம், இரு நாட்டு மக்களுக்கு ஊக்கம் அளித்ததுடன், களமுன்னணியில் சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு மதிப்பு அளித்தனர். 2 மணி நேரம் நீடித்த இந்நிகழ்ச்சியில், சீனப் பாரம்பரிய நாட்டுப்பற இசை நாடகங்களும், மேலை நாடுகளின் பாடல்களும் இடம்பெற்றன.

லாஸ் ஏஞ்சல்ஸுக்கான சீனத் துணை தூதர் ட்ஸாங் பிங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், இக்கடினமான காலத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி சீன மற்றும் அமெரிக்க மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பல்வேறு நாட்டு மக்கள் ஒரு மனதாக முயற்சி மேற்கொண்டால், கரோனா வைரஸை வெகு விரைவில் தோற்கடிப்பது உறுதி என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்