கரோனா வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உலகச் சுகாதார அமைப்பின் கருத்து

பூங்கோதை 2020-05-14 11:40:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவல் நிலைமை பற்றிய செய்தியாளர் கூட்டத்தை உலகச் சுகாதார அமைப்பு மே 13ஆம் நாள் நடத்தியது. இதில், இவ்வமைப்பைச் சேர்ந்த அவசரச் சுகாதாரத் திட்டப்பணியின் பொறுப்பாளர் மைக்கேல் ரியான் பேசுகையில், கரோனா வைரஸ் பரவலின் இடர்ப்பாட்டு நிலை மீண்டும் மதிப்பிடப்படும் என்றும் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் அதேவேளை பொதுச் சுகாதாரக் கண்காணிப்பு அமைப்பு முறையும் நடைமுறைக்கு வரும் வரை இவ்வைரஸ் பரவல் முழு உலகிற்கும் இன்னும் உயர் இடர்ப்பாடாக அமையும் என்றும் கூறினார். கரோனா வைரஸ் எப்போது ஒழிக்கப்படும் என்ற கேள்விக்கு, அதை யாராலும் கணிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இது நீண்டகாலப் பிரச்சினையாக மாறக்கூடும் என்றும் இதன் பாதிப்பைத் தடுக்கும் வகையில் உயர் பயனுள்ள தடுப்பூசியைக் கண்டறிந்து, உலக மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னதாகப் பேசிய உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ், கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் உயர்நிலை இடர்ப்பாட்டு முன்னெச்சரிக்கையை நிலைநிறுத்தி, நடைமுறை நிலைமைக்கிணங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்