கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் உறுப்பினர்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஆதரவு

பூங்கோதை 2020-05-19 11:06:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டு அறிக்கை 2019 மே 18ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் 2019ஆம் ஆண்டில் இவ்வங்கியின் இயக்கம் மற்றும் நிதி நிலைமைப் பற்றி பன்முகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு, ஆசியா மற்றும் பசிபிக் பிரதேசத்திலுள்ள தனது வளர்ந்து வரும் உறுப்பினர்களுக்கு, வளர்ச்சித் திட்டங்களையும், தொடர்புடைய ஆதரவுகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கியுள்ளது. அவற்றுக்கான மொத்த முதலீட்டுத் தொகை 3374 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மஸட்சுகு அசகவா பேசுகையில், கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகின்ற நிலைமையில், ஆசிய வளர்ச்சி வங்கி, முன்பு பெற்றுள்ள சாதனைகளை அடிப்படையாகக் கொண்டு, வைரஸ் பரவலைத் தடுப்பதிலும், மீண்டும் வளர்ச்சியடைவதிலும் தனது உறுப்பினர்களுக்கு உதவியளிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்