உலகச் சுகாதார அமைப்புக்கு டிரம்ப் அனுப்பிய கடிதத்தில் தவறு உள்ளது: லன்செட் இதழ்

ஜெயா 2020-05-20 10:28:17
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மே 18ஆம் நாள் உலகச் சுகாதார அமைப்புக்கு அனுப்பிய கடிதத்தில் தவறு உள்ளது என்று மே 19ஆம் நாள், லன்செட் எனும் புகழ்பெற்ற மருத்துவ இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

2019ஆம் ஆண்டின் டிசம்பர் துவக்கத்தில் அல்லது அதற்கு முன்னதாக வூஹானில் நிகழ்ந்த குறிப்பிட்ட ஒருவகை வைரஸ் பரவல் பற்றி லன்செட் உள்ளிட்டவை வெளியிட்ட தகவல்களை உலக சுகாதார அமைப்பு புறக்கணித்ததாக டிரம்ப் உலகச் சுகாதார அமைப்புக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், லன்செட் இதழின் தலைமை பதிப்பாசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் இது பற்றி கூறுகையில், டிரம்பின் இக்கடிதத்தில் தவறு உள்ளது. வூஹான் அல்லது சீனாவின் வேறு இடங்களில் வைரல் பரவியது பற்றி 2019ஆம் ஆண்டு டிசம்பர் திங்களின் துவக்கத்தில் லன்செட் இதழ் எந்த தகவலும் வெளியிடவில்லை. இது தொடர்பான முதல் கட்டுரை 2020ஆம் ஆண்டின் ஜனவரி 24ஆம் நாள் வெளியிடப்பட்டது என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்