சர்வதேசச் சமூகத்தின் பாராட்டுக்களைப் பெற்ற ஷி ச்சின்பிங்கின் உரை

பூங்கோதை 2020-05-20 13:16:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மே 18ஆம் நாளிரவு நடைபெற்ற உலகச் சுகாதார அமைப்பின் 73ஆவது மாநாட்டின் துவக்க விழாவில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், காணொலி மூலம் உரை நிகழ்த்தினார். இவ்வுரையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியை வலுப்படுத்துவதற்கான 6 ஆலோசனைகளையும், வைரஸ் பரவல் தடுப்பில் சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கான 5 நடவடிக்கைகளையும் அவர் முன்வைத்தார். அவரின் இந்த முன்மொழிவுகள் பெரிய நாடான சீனாவின் பொறுப்பை வெளிப்படுத்தியுள்ளதோடு, கரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உலகச் சுகாதார அமைப்பின் அதிகாரிகளும், பல்வேறு நாடுகளின் பிரமுகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷிச்சின்பிங்கின் உரை குறித்து, உலகச் சுகாதார அமைப்பின் 73 ஆவது மாநாட்டின் தலைவரும், லாவோஸ் சுகாதார அமைச்சருமான பவுன்கோங் சிஹாவோங் பேசுகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் உரை மக்களுக்கு ஊக்கமளித்துள்ளதாகத் தெரிவித்தார். அதோடு, கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றுள்ள சீனா, பல்வேறு நாடுகளுக்கு அனுபவங்கள் மற்றும் உதவிகளை வழங்கும் வகையில் சமூக ஆற்றலைத் திரட்டி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

எகிப்து வெளியுறவு துறையின் ஆசிய விவகாரத்துக்கான அமைச்சரின் உதவியாளர் ஹனி செலிம் பேசுகையில், மனிதக் குலம் இத்தகைய பெரிய அறைகூவலை எதிர்நோக்கியுள்ள போது, சீனா உலகின் பல்வேறு நாட்டு மக்களுக்கு உதவியளிப்பதன் மூலம் மனிதக் குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகம் என்ற கருத்தைச் செவ்வனே வெளிப்படுத்தியுள்ளது என்றார்.

மேலும், ஆஸ்திரேலியா ஏ.பி.ஏ.சி நியூஸ் தலைமைப் பதிப்பாசிரியர் மார்கஸ் ரூபன்ஸ்டீன் தெரிவிக்கையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் சீனா நல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார். அதோடு, சர்வதேசச் சமூகம் உலகளாவிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சர்வதேச வர்த்தகத்தில் பயன் தரும் விநியோக சங்கிலியை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இது எதிர்காலத் தலைமுறைகளுக்கு நன்மை புரியும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்