ஆம்பன் புயலால் இந்தியாவில் 77 பேர் பலி

பூங்கோதை 2020-05-22 10:24:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு மே 21ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ஆம்பன் என்னும் கடும் புயல்காற்றின் காரணமாக, இந்தியாவில் இதுவரை குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

புயல் காற்றினால் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில், பல வீடுகள், பாலங்கள், அணைக்கட்டுப்பகுதிகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் அடியோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என்று உள்ளூர் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்தப் புயல், கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் கடுமையான புயல் காற்றாக இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்