கொவைட்-19 தடுப்பூசிக்கான மருத்துவ ரீதியிலான ஆய்வில் பயனுள்ள முடிவு!

மதியழகன் 2020-05-23 16:06:44
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 நோய்த் தொற்று தடுப்பூசிக்கான மருத்துவ ரீதியிலான ஆய்வு முடிவு 22ஆம் நாள் பிரிட்டனின் தி லான்செட் எனும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், சீன ஆய்வுக் குழு உருவாக்கிய தடுப்பூசியின் முதல் கட்டச் சோதனை பாதுகாப்பானது என்பதையும் மனித உடலில் இந்த தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதையும் ஆய்வு முடிவு எடுத்துக்காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியிலான சோதனையில், 108 தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டப் பிறகு, 14 நாட்களுக்குள் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. 28 நாட்களுக்குப் பிறகு, கடுமையான பக்க விளைவுகள் ஏற்படவில்லை. எனவே, இந்த ஆய்வு முடிவு முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது என்று இந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்தச் சோதனையில், மாதிரிகளின் எண்ணிக்கை குறைவாகவும் சோதனை நேரம் குறுகியதகாவும் இருந்தன. எனவே, அடுத்தக் கட்டம், மேலதிக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவைட்-19 தொற்று நோய் பரவலைத் தடுத்து நிறுத்தும் வகையில் உரிய தடுப்பூசி கண்டுபிடிப்பது ஒன்றே, நீண்டகால தீர்வு வழிமுறையாகும். மேலும், தற்போது, உலகளவில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக, தி லான்செட் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்