டிரம்பைக் கைது செய்ய ஈரான் கட்டளை பிறப்பிப்பு

வாணி 2020-06-30 10:23:35
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரானின் உயர் ராணுவ அதிகாரி சுலைமணி படுகொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அமெரிக்க அரசுத் தலைவர் டோனால்ட் டிரம்பைக் கைது செய்யும் கட்டளையை ஈரான் சட்ட நீதி வாரியம் பிறப்பித்துள்ளது. ஈரானின் செய்தி ஊடகங்கள் 29ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இது பற்றி ஈரான் சர்வதேசக் குற்றவியல் காவல்துறை அமைப்பிடம் சிவப்பு கைது ஆணையைக் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும், டிரம்பைக் கைது செய்யும் ஈரானின் இக்கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று சர்வதேசக் குற்றவியல் காவல்துறை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பதிலளித்துள்ளதாக ரஷியாவின் ஸ்பாட்னிக் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்