அமெரிக்க அரசுத் தலைவர் முகக் கவசத்தை அணிய வேண்டும்: நியூயார்க் மாநில தலைவர்

2020-06-30 10:48:38
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் புதிய ரக கரோனா வைரஸ் பரவி வரும் நிலைமை பற்றி அம்மாநிலத் ஆளுநர் ஆண்ட்ரூ கோமோ 29ஆம் நாள் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அப்போது, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்மாதிரியாக செயல்பட்டு, முக கவசத்தை அணிய வேண்டும் என்று கோமோ வேண்டுகோள் விடுத்தார்.

டிரம்ப் நிர்வாக கட்டளையில் கையொப்பமிட்டு, அனைவரும் பொது இடங்களில் முக கவசத்தை அணிய வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் நிலைமை மோசமானது. ஆனால் பொது இடங்களில் மக்கள் முக கவசத்தை அணிவது என்ற மிக அடிப்படையான விஷயம் செய்யவில்லை. எனவே, அரசுத் தலைவர் முன்மாதிரியாக இருந்து, முக கவசத்தை அணிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்