2019 மார்ச் கழிவுநீரில் இருந்து புதிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது - ஸ்பெயின்

வாணி 2020-06-30 13:59:25
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டு மார்ச் திங்களில் சேகரிக்கப்பட்ட கழிவு நீரிலிருந்து புதிய கரோனா வைரஸைக் கண்டறிந்துள்ளதாக ஸ்பெயின் பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு அண்மையில் அறிவித்தது.

 இது குறித்து அந்த ஆய்வுக் குழுவின் தலைவரும் உயிரியல் பேராசிரியருமான அல்பர்ட் போஷ் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், கடந்த ஆண்டு கழிவு நீரிலிருந்து நாங்கள் கண்டறிந்த கரோனா வைரஸின் அடர்த்தியானது இவ்வாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் திங்கள்களில் நீரிலிருந்து கண்டறியப்பட்ட அடர்த்திக்குச் சமமாகவுள்ளதாகக் கூறினார்.

 கடந்த ஆண்டே இது குறித்த ஆய்வை ஏன் மேற்கொள்ளவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,  கடந்த ஆண்டு காய்ச்சல் பரவிய போது புதிய கரோனா வைரஸை யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்