குளிர் நீரோட்டத்தால் பாதிப்புக்குள்ளான அர்ஜென்டீனாவின் ரியோ கிராண்டே நகர்

ஜெயா 2020-07-01 09:45:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அர்ஜென்டீனாவின் ரியோ கிராண்டே நகர், அண்மையில் குளிர் நீரோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 29ஆம் நாள் காலை நிலவரப்படி அந்நகரின் வானிலை பூஜியத்துக்குக் கீழ் 14.9 டிகிரி செல்சியஸ் ஆகும். இது இவ்வாண்டில் காணப்பட்ட மிகத் தாழ்ந்த தட்ப வெப்பப் பதிவாகும். இந்நிலையில், இயன்ற அளவில் அனைத்து வளத்தையும் பயன்படுத்தி, குடிமக்களுக்கு உதவி செய்து வருவதாக உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கடந்த ஒரு வாரமாகக் காணப்படும் தீவிரமான வானிலையின் காரணமாக, நீர் வினியோகம், வெப்ப வசதி வினியோகம் முதலிய சேவைகள் குறிப்பிட அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்