வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முன் பொருளாதார மீட்சி சாத்தியமில்லை – பாவெல்

ஜெயா 2020-07-01 09:56:22
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்ளூர் நேரப்படி ஜூன் 30ஆம் நாள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் பிரதிநிதிகள் அவையின் நாணயச் சேவை ஆணையத்தின் கேட்டறிதல் கூட்டத்தில் கலந்து கொண்டு, அமெரிக்க பொருளாதார மீட்சி உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், கொவைட்-19 நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்களுக்கு இயல்பு நிலைக்குத் திரும்புவதில் நம்பிக்கை ஏற்படாதவரை பொருளாதாரம் முழுமையாக மீட்சியடைவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்தார்.

 

மேலும், அமெரிக்க அரசு பொருளாதார மீட்சிக்குரிய கொள்கைகளை முன்வைத்து, பொருளாதார மீட்சிக்குரிய ஆதரவை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பாவெல்,  ஒருவேளை 2 ஆவது முறை வைரஸ் பரவும் நிலை ஏற்பட்டால், மக்கள் மேலும் நம்பிக்கையை இழப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்