கரோனாவை எதிர்கொள்வதில் “ஏ.ஐ.ஐ.பி”வங்கி பங்களிப்பு

சரஸ்வதி 2020-07-29 09:54:21
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

படம்:VCG

ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் 5ஆவது ஆண்டு கூட்டம் ஜூலை திங்கள் 28ஆம் நாள், காணொலி காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தின் துவக்க விழாவில், இவ்வங்கியின் தலைவர் ஜின்லிச்சுன் பேசுகையில்,

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு, நெருக்கடி மீட்சி நிதியம் ஒன்றை உருவாக்கியது. 12 உறுப்பு நாடுகளுக்கு இந்நிதியம் சுமார் 600 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவித் தொகையை வழங்கியுள்ளது. இது வரை, உறுப்பு நாடுகளுக்கு 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள அடிப்படை வசதி முதலீட்டுத் தொகையையும் இவ்வங்கி அளித்துள்ளது என்றார் அவர்.

பத்துக்கும் மேலான திட்டங்களுக்கு இவ்வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. எரியாற்றல், போக்குவரத்து, நாணயம், நீர் மூலவளம், நகரப்புற வளர்ச்சி முதலிய துறைகள் இதில் அடக்கம். 2016ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 16ஆம் நாள் இவ்வங்கி அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. தற்போது, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஓஷானியா ஆகிய 102 உறுப்பு நாடுகள் இவ்வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்