ஐரோப்பாவில் இருந்து கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடையாளம் கண்டதில் மெதுவாக செயல்பட்ட டிரம்ப் அரசு: சி.டி.சி இயக்குநர்

மதியழகன் 2020-07-30 16:01:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பாவில் இருந்து வந்த புதிய ரக கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கண்டுபிடிப்பதில் டிரம்ப் அரசு மெதுவாகச் செயல்பட்டதால், தொற்று நோய் அமெரிக்காவில் பெருமளவில் ஏற்பட்டது என்பதை அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமான சி.டி.சி இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் 28ஆம் நாள் முதல்முறையாக ஒப்புக்கொண்டார்.

அன்று, ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில்,

அமெரிக்கா பிரச்சினையை புரிந்து கொள்ளும் முன்பு, கரோனா வைரஸ் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு பரவி விட்டது. இந்த அச்சுறுத்தலை தெரிந்து கொண்டு பயணத் தடை விதிப்பதற்கு முந்தைய 2 முதல் 3 வாரங்களுக்குள் நாள்தோறும் 60ஆயிரம் பேர் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இது, அமெரிக்காவில் தொற்று நோய் பெருமளவில் ஏற்பட்டதற்கான முக்கியக் காரணமாகும் என்று தெரிவித்தார்.

மார்ச் 13ஆம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு அமெரிக்கா தடை விதித்தது. ஆனால், மார்ச் 8ஆம் நாள் எனும் போதே நியூயார்க் மாநிலத்தில் உள்ள பல குடியிருப்புகளில் கரோனா வைரஸ் பரவி விட்டது. மார்ச் 15ஆம் நாள் எனும் போது, வாஷிங்டன் மாநிலம் உள்ளிட்ட நாடளவில் குடியிருப்புப் பகுதிகளில் வைரஸ் பரவியது என்று சி.டி.சி அண்மையில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்