பாம்பியோ அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர்:வாஷிங்டன் போஸ்ட்

வாணி 2020-09-11 20:36:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மைக் பாம்பியோ அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான வெளியுறவு அமைச்சர் என்று வாஷிங்டன் போஸ்ட் அண்மையில் கட்டுரை ஒன்றில் விமர்சித்துள்ளது.

சீனா அமெரிக்காவை சுரண்டி வருகின்றது என்றும் கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்கா சீனாவிடம் அடிபணிந்துள்ளது என்றும் பாம்பியோ அண்மையில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போது கூறினார். இதைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பனிப் போர் என்ற சிந்தனை மூலம் பாம்பியோ நாடுகளுக்கிடையில் பிரிவினை மற்றும் எதிர்ப்பு நிலையை உருவாக்கி உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி வருகின்றார்.

நடைமுறையில், பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மூலம் சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக வெற்றி பெறும் குழுவாக மாறியுள்ளன.

புதிய ரக கரோனா பரவல் நிலையில், சீனா அமெரிக்காவுக்கு 2650 கோடி முக கவசங்கள், 33 கோடி கவச ஆடைகள், 3 கோடிக்கும் அதிகமான பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை விநியோகித்துள்ளது.

ஒற்றுமைக்குப் பதிலாக மக்களுக்கிடையில் பிளவு நிறைந்த காரணமாக, புதிய கரோனா வைரஸ் இனும் பரவலாக பரவி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் செய்தியாளர் கூட்டத்தில் 10ஆம் நாள் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்