மனித உரிமைக்கான உத்தரவாதம் வைரஸ் பாதிப்பைக் குறைக்கத் துணைபுரியும் - ஐ.நா. அதிகாரி

வான்மதி 2020-09-15 11:31:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 45ஆவது கூட்டம் செப்டம்பர் 14ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் துவங்கியுள்ளது. அப்போது நடைபெற்ற ஒரு சிறப்புக் கருத்தரங்கில் மனித உரிமை விவகாரத்துக்கான ஐ.நாவின் உயர்நிலை ஆணையர் மிஷேல் பேச்லெட் கூறுகையில், மனித உரிமைக்கான நல்ல உத்தரவாத நடவடிக்கைகளால் தொற்று நோய் ஏற்படுத்திய பாதிப்பைக் குறைக்க முடியும் என்றும், கொவைட்-19 நோய் பரவி வரும் நிலைமையில் சில நாடுகளில் மேம்பாட்டுடைய மருத்துவ மற்றும் சமூகக் காப்புறுதி முறைமைகள் முக்கியப் பங்கினை அளித்து, பொது மக்களின் அடிப்படை உரிமை நலன்களைச் சிறப்பாகப் பேணிக்காத்துள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், நீண்டலாகமாக நிலவி வரும் சமனற்ற நிலைமையை இந்தத் தொற்று நோய் வெளிப்படுத்தியுள்ளது. வேறுபட்ட இனங்கள் மற்றும் சமூகத் தகுநிலை கொண்டவர்கள் இவ்வைரஸால் வேறுபட்ட அளவில் பாதிப்படைந்துள்ளனர். எனவே குறிப்பிட்ட நாடுகள் யதார்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டு சமமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்