75ஆவது ஐ.நா பேரவை தொடக்கம்

இலக்கியா 2020-09-16 10:19:37
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் தலைமையகத்தில் செப்டம்பர் 15ஆம் நாள் 74 ஆவது ஐ.நா பேரவையின் நிறைவு விழா மற்றும் 75 ஆவது பேரவையின் துவக்க விழா நடைபெற்றன. இதில், 75ஆவது ஐ.நா பேரவையின் தலைவராகப் பதவியேற்றுக் கொண்ட துருக்கி தூதாண்மை அதிகாரியான வொல்கன் பொஸ்கிர் கூறுகையில், உலகளவில் நோய் தடுப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவது, பலதரப்புவாதத்தை வளர்ப்பது, மனித உரிமையைப் பாதுகாப்பது, 2030ஆம் ஆண்டுக்குள் தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் மற்றும் இலக்கை நிறைவேற்றுவது, பாலின சமத்துவம் முதலியவை தன் பதவிக் காலத்தின் முக்கிய கடமைகளாக இருப்பதென தெரிவித்தார்.

நடப்பு ஐ.நா பேரவையின் பொது விவாதம் செப்டம்பர் 22ஆம் நாள் தொடங்கி 26ஆம் நாள் வரையிலும் அதன் பின் 29ஆம் நாளும் நடைபெறவுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்