இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம்-பஹ்ரேன் இயல்பு உறவுக்கான ஒப்பந்தம்

இலக்கியா 2020-09-16 10:49:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுடனான இஸ்ரேலின் உறவை இயல்பாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழா 15ஆம் நாள் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இஸ்ரேல் தலைமை அமைச்சர் நெதன்யாகூ முறையே ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா, பஹ்ரைன் தூதாண்மைச் செயலாளர் சயானி ஆகியோருடன் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர். அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸ் அன்று வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனம் மீது ஆக்கிரமிப்பதை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமைதியைக் காண முடியாது என்று தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அதேநாள் பாலஸ்தீன ஜோர்டான் ஆற்றின் மேற்குக் கரை மற்றும் காசா பிரதேசத்தின் பல நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்