காணொலி: யுனெஸ்கோ பரிசு விழாவுக்கு பெங் லீயுவானின் வாழ்த்துரை

2020-10-13 14:30:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்விக்கான 5ஆவது யுனெஸ்கோ பரிவு விழாவுக்கு சீன அரசுத் தலைவரின் மனைவியும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்கான யுனெஸ்கோவின் சிறப்புத் தூதருமான பெங் லீயுவான் அக்டோபர் 12ஆம் நாள், காணொலி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இலங்கை, கென்யா ஆகிய நாடுகளில் இப்பரிசு பெற்றவர்களை இதயபூர்வமாக வாழ்த்துகிறேன் என்று பெங் லீயுவான் தெரிவித்தார்.

மேலும், அவர் தனது உரையில்,

2015ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் சீனாவும் இணைந்து ஒத்துழைப்புடன் இந்த பரிவை நிறுவுவதாக அறிவித்தன. பரிசு பெற்றவர்கள், தனது நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அறிவுகளையும் தொழில் திறனையும் பெற உதவி அளித்துள்ளனர். கல்வி பாலின சமத்துவத்தை மேம்படுத்தி, சமூக வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு அவர்கள் தங்கள் பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்விப் பணிகள் தற்காலத்தில் அவசியமானதாகும். அதன் பயன்கள் எதிர்வரும் காலத்தில் தொடர்ச்சியாக காணப்படும். இதற்காக, மேலதிக நாடுகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் முனைப்புடன் இந்த பணிகளை ஆதரித்து இதில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். சீனா யுனெஸ்கோவுடன் இணைந்து ஒத்துழைத்து, 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை பெண் குழுந்தைகள் மற்றும் பெண்களின் கல்விக்கான பரிசுப் பணியை செவ்வனே செய்யும். இதன் மூலம், சர்வதேச கல்விப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுத்து, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்தி, ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி இலக்கை நனவாக்க மேலதிக பங்காற்றும் என்று தெரிவித்தார்.

பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் கல்வியை மேம்படுத்துவதில் தலைசிறந்த பங்காற்றி வரும் நிறுவனம் மற்றும் தனிநபரைப் பாராட்டும் விதமாக, யுனெஸ்கோவின் இந்த பரிசு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்