​தரவுப் பாதுகாப்புக்கான உலக விதிமுறையைக் கூட்டாக உருவாக்க சீனா வேண்டுகோள்

மதியழகன் 2020-10-13 21:01:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐந்து கண்கள் என்று அழைக்கப்படும் ஐந்து நாடுகள் அடங்கிய உளவுத்துறைப் பகிர்வு கூட்டணி, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து, சிக்னல்(Signal) டெலிக்ரம்(Telegram) உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், தனது செயலிகளில் பின்வாசலைத் திறந்து வைப்பதன் மூலம், சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு அணுகுமுறை அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாவ்லீஜியான் 13ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்,

நீண்டகாலமாக, இந்தக் கூட்டணியின் உறுப்பு நாடுகள், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், சீன தொழில் நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டி வருகின்றன. அதேவேளையில், தற்போது எந்த கவனமுமின்றி பிற தொழில் நிறுவனங்கள் தனுக்கு பின்வாசலைத் திறந்து வைக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. இது, இரட்டை நிலைப்பாடு எடுப்பதற்கான உதாரணம் அல்லவா? என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த நாடுகளின் செயல்கள், அரசியல் நோக்கத்துக்காக பிற நாடுகளின் தொழில் நிறுவனங்களை அடக்குமுறை செய்வதாகும் என்பது மீண்டும் மெய்பிக்கப்பட்டுள்ளது என்று சாவ் லீஜியான் தெவித்தார்.

மேலும், பல்வேறு தரப்புகளும், உலக தரவுகள் பாதுகாப்பு முன்மொழிவை ஆதரித்து, தரவுகளின் பாதுகாப்புக்கான உலக விதிமுறையைக் கூட்டாக உருவாக்கி, இணைய பாதுகாப்பைக் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுப்பதாக சாவ் லீஜியான் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்