கரோனா வைரஸ் தடுப்பில் சீனாவின் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டு

2020-10-16 11:41:18
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் சிங்தாவ் நகரில் 12 பேருக்கு புதிய ரக கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த ஐந்து நாட்களில் இந்நகரில் உள்ள 90 லட்சம் குடிமக்களிடம் வைரஸ் சோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

சீனா மேற்கொண்டு வரும் கண்டிப்பான வைரஸ் சோதனை நடவடிக்கைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தாமல் இருக்க கூடும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு நிர்வாக ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஸ்கோட் கோடிலேப் தெரிவித்தார்.

சிங்தாவ் நகரில் புதிகாக நிகழ்ந்த வைரஸ் பரவல் குறித்து சீன அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டதற்கு வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. சீன அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, சீனாவில் கரோனா வைரஸ் தொற்றியவரின் அதிகரிப்பை மிக தாழ்ந்த நிலையில் நிலைநிறுத்தியுள்ளது என்று இச்செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைரஸ் தடுப்பில் சீனா மேற்கொண்டு வரும் கண்டிப்பான நடவடிக்கை உயிர் மற்றும் உலகத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்கும் ஒன்றாகும் என்று டி ஜப்பான் டைம்ஸ் எனும் செய்தித்தாள் பாராட்டியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்