விண்வெளியில் இயங்கும் மீத்திறன் கணினித் திட்டத்தை தொடக்கிய அமெரிக்கா

2017-08-15 11:21:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

விண்வெளியில் இயங்கும் மீத்திறன் கணினித் திட்டத்தை தொடக்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 14ஆம் நாள் நண்பகல் 12:31 மணிக்கு ஃபல்கான்   9 எனும் ஏவூர்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஏவூர்தியில் மீத்திறன்   கணினி ஒன்றும் முதல்முறையாக விண்ணில் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது.
வரும் 17ஆம்   நாள், இந்த ஏவூர்தி, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய உள்ளது. அதற்கு பிறகு இந்த   மீத்திறன் கணினி ஓராண்டுக் காலம் இயங்கி, பல்வகை சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் அதன்   செயல்திறன் மதிப்பிடப்படும்.
விண்வெளியில் இயங்கும் இந்த மீத்திறன் கணினிக்கு   ஸ்பேஸ்போர்ன் என பெயர் சூட்டப்பட்டது. விண்வெளி மீத்திறன் கணினியின் ஆய்வு   திட்டத்தை தொடக்கி வைப்பது, மனிதர்கள் செவ்வாய்கோளுக்கு அனுப்படுவதன் போக்கில்   முக்கிய காலடியாகும் என்று கருதப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்