Mobike நிறுவனமும் உலக மிதிவண்டி பயணத் தினமும்

வான்மதி 2017-09-18 15:47:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

Mobike நிறுவனமும் உலக மிதிவண்டி பயணத் தினமும்

பகிர்வு மிதிவண்டி நிறுவனமான Mobike, செப்டம்பர் 17ஆம் நாள், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம், ஐ.நா. மனித உறைவிடத் திட்ட அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, உலக மிதிவண்டி பயணத் தினம் என்ற நடவடிக்கையின் மூலம், பசுமை பயணத்தை மேற்கொள்ள பொது மக்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இவ்வாண்டு, மிதிவண்டி பிறந்த 200ஆவது ஆண்டு நிறைவும், Mobike உள்ளிட்ட நுண்ணறிவார்ந்த பகிர்வு மிதிவண்டியின் தலைமையில் மிதிவண்டிகள் நகரங்களில் மீண்டும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதலாவது ஆண்டு நிறைவும் ஆகும். கடந்த 500 நாட்களில், பேருந்து, சுரங்கத் தொடர்வண்டி ஆகியவற்றைத் தொடர்ந்து நகரத்தில் பகிர்வு மிதிவண்டி மூன்றாவது முக்கிய போக்குவரத்து முறையாக மாறியுள்ளது. நகர மற்றும் மானிட பண்பாட்டுச் சூழலையும் அது ஆழ்ந்த முறையில் மாற்றியுள்ளது.

Mobike நிறுவனமும் உலக மிதிவண்டி பயணத் தினமும்

இதுவரை உலகளவில் 70 லட்சம் Mobike மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்துள்ள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 15 கோடிக்கு மேலாகும் என்று Mobike மிதிவண்டி நிறுவனத்தின் கூட்டு நிறுவனர் வாங் சியௌ ஃபேங் கூறினார்.

“500 நாட்களில் Mobike பயன்பாட்டாளர்கள் பயணித்த தூரம் 560 கோடி கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. இத்தூரம் 4 சக்கர வாகனத்தால் நிறைவேற்றப்பட்டால், 13 லட்சத்து 60 ஆயிரம் டன் கரிய வாயு வெளியேற்றப்பட்டிருக்கும். 3 லட்சத்து 50 ஆயிரம் மகிழுந்துகளின் ஓராண்டுகால கரிய வாயு வெளியேற்ற அளவுக்கு இது சமம்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அலுவலகம், ஐ.நா. மனித உறைவிடத் திட்ட அலுவலகம், உலக இயற்கை நிதியம், உலக மூல வள ஆய்வகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் Mobike நிறுவனம்  முன்மொழிவில் கையொப்பமிட்டு, உலக மிதிவண்டி பயணத் தினத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. பசுமை பயணத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் நாள் குறிப்பிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உலக மிதிவண்டி பயணத் தினத்தின் உருவாக்கம், தற்போதைய உலகின் வளர்ச்சிப் போக்கிற்குப் பொருத்தமாக உள்ளது. ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரல், காலநிலை மாற்றத்துக்கான பாரிஸ் உடன்படிக்கை முதலியவற்றில் பசுமை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உறைவிடத் திட்ட அலுவலகத்தின் சீனத் திட்டப்பணித் தலைவர் ச்சாங் ச்சென்ஷான் தெரிவித்தார். மேலும், உலக மிதிவண்டி தினத்தின் உருவாக்கத்தை வாய்ப்பாகக் கொண்டு மிதிவண்டி பயணம் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Mobike நிறுவனமும் உலக மிதிவண்டி பயணத் தினமும்

முதலாவது உலக மிதிவண்டி பயணத் தினத்தின் தலைப்பு, மிதிவண்டி பயணம் நகரத்தை மாற்றுவது என்பதாகும். சீனாவின் மாநகரங்கள், சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட நகரங்களில் Mobike நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்